Friday, December 31, 2010

புத்தாண்டு பிறக்கிறது!

புத்தாண்டு பிறக்கிறது!

நம் திட்டங்களை செயல் படுத்தும்
புது யுக்தியோடு,
நிலத்தை  உழுதும்
ஏர் கலப்பையின் தீவிரத்தோடு,
நானேற்றப்பட்ட அம்பின்
தீர்கத்தோடு,
புத்தாண்டு பிறக்கிறது!

இரட்சிக்கப்பட்ட குழந்தையாய்
அஸ்வ மேத யாகத்தில் ஓடும் புரவியாய்
விடிவெள்ளியாய்
புத்தாண்டு பிறக்கிறது!

கசப்பிருந்தால் காலி பாட்டில்களாய் தொலையட்டும்
மிச்சங்களை கடைசி கோப்பை மதுவாய் கருதுவோம்,

புத்தாண்டு பிறக்கிறது!!

Wednesday, December 29, 2010

இந்த நாடு விற்ப்பனைக்கு

வல்லரசு அந்தஸ்த்தை எட்ட துடிக்கும் பட்டியளில் முதல் இடத்தில் இருக்கும் இந்த இந்திய துணை கண்டத்தில் நூறு கோடி மக்கள் தொகையை தாண்டி விட்டோம், இரண்டு அணு சோதனை, சந்திராயன், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், அனைவரும் பயன் படுத்த செல் போன் என கடந்த அறுவது ஆண்டு சுதந்திர இந்தியா மேலோட்டமான முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் இன்னும் முழுசா மூன்று வேளை உணவு கிடைக்காமல் இருக்கும் ஒரு வர்க்கமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. படித்தவர்கள் எதோ ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு கணிசமான ஊதியம் வாங்கி கொண்டும், அரசாங்கத்தில் பணி புரிபவர்கள் பாடு இன்னும் மோசம், தன் பொண்டாட்டியை பக்கத்துக்கு வீட்டுக்காரன் தர குறைவாக பேசினால் கூட அவனை எதிர்த்து கேட்க திராணி இருப்பதில்லை, காரணம் பக்கத்துக்கு வீட்டுக்காரன் ஒரு வேளை பொய் வழக்கு தொடுத்தால் கூட தன் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்று கோழை தனமாக இருக்கும் இந்த சமூகமும் முழுசா மூன்று வேளை உணவு கிடைக்காத பட்டியலிலே இடம் பெரும். ஒரு வேளை அவர்கள் பணியில் ஏதேனும் சிக்கல் வருமாயின் அடுத்த ஆறு மாதத்தில் அவர்களுக்கும் இந்த நிலை தான். இப்படி கட்டமைக்க பட்டிருக்கும் ஒரு சமூக சூழலில் இன்னொரு வர்க்கம் சர்வ சாதரணமாக ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று நாட்டை ஏமாற்றி கொள்ளை அடித்து கொண்டிற்றுக்கிறது.




நாட்டில் இருக்கும் இய்றக்கை வளங்களை பயன்படுத்தி அதன் மூலம் வரும் வருவாயை நாட்டு நல திட்டங்களுக்கு பயன்படுத்தினால் மேலும் நாடு முன்னேறு கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம்  உப்பு மிளகாய் விலையாவது ஏழை மக்கள் வாங்கும் அளவு இருந்து கொண்டு இருக்கும். இவர்கள் அடிக்கும் நூதன கொள்ளை நேரடியாக யார் வீட்டிலும் இல்லை என்பது அவர்கள் கற்பிக்கும் நியாயம். ஆனால்
அது சாமானிய மனிதனின் அன்றாட வாழ்கையை எந்த அளவு பாதிக்கும் என்பது நம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. விலை ஏற்றதை செய்தி தாளில் படித்து தெரிந்து கொள்வதற்கும், அந்த விலை கொடுத்து வாங்க முடியாமல் திண்டாடி தெரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

மன்னர் ஆட்சிகளில் அந்நிய நாட்டு படையெடுப்பில் முடிந்த வரை செல்வங்களை கொள்ளை அடித்து கொண்டுவந்து தன் அரசிரடம் கொடுத்து புகழாரம் சூட்டிக்கொள்ளும் தளபதியாக ஆ. ராசாவும் கொள்ளை அடிக்கப்பட்ட செல்வத்தில் தன் கஜானாவை நிரப்பிக்கொள்ளும் அரசராக மு. கருணாநிதியும் நவீன வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். எதிர் கட்சிகள் கேட்கும் கேள்விக்கு விளக்கம் அளிக்காமல் அவர்கள் ஊழலை பட்டியல் இட்டு மக்களை திசை திருப்பும் அரசியல் சாமர்த்தியம் இந்திய அளவில் கற்றுகொடுக்கும் முன்னோடி அரசியல் வாதியாக கருணாநிதி மேலும் தன் அரசியல் அனுபவத்தை நிலை நிறுத்துகிறார். வெங்காய விலை எரியிருக்கிரதே ? என்று நிருபர் கேள்விக்கு, அதை பெரியாரிடம் தான் போய் கேட்கவண்டும், என்று நையாண்டி விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் அவருக்கு நகைச்சுவை உணர்வு ஏற்படுத்தும் கருவாக மாற்றி இருக்கிறார். சரி அவரை சொல்லி குற்றம் இல்லை, சமைத்த உணவு சாப்பிடும் நிலையில் கருணாநிதி இல்லை, ஆக அவரை பொருத்த வரை இது அவருக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனை.

2G 1 .76 லட்சம்  கோடி, காமன் வெல்த் போட்டிகளில் 8000  கோடி, ipl  போட்டிகளில் 1500 கோடி, மொத்தம் 2010 ல் மட்டும் 2  லட்சம் கோடி ஊழல் என்று ஒரு சாமானிய மனிதனின் கணித அறிவுக்கே எட்டாத தொகைகளில் ஊழல் செய்து சம்பாதிக்கும் இந்த நாட்டில் தான் பிச்சை எடுத்தல், விபச்சாரம் போன்றவற்றை செய்து பிழைக்கும் வர்க்கமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவை விலைக்கு விற்கும் டெண்டர் அறிவிப்பு ரொம்ப தூரத்தில் இல்லை. அதை பற்றி எந்த கட்சிகளும் கவலை படபோவதில்லை, யாருக்கு எத்தனை தொகுதி, கூட்டணி வியூகம், ஆட்சி அதிகாரம் இது பற்றி மட்டுமே கவலை, ஆனால் இவர்களுக்குள்ளே எதோ ஒரு கருப்பு ஆடு நாட்டை வியாபாரம் செய்யும் போது தன் பங்கை மட்டும் வாங்கி கொண்டு இவர்கள் வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்து கொள்ளும் முன் ஏற்பாடாக தான் இந்த கொள்ளை அடிக்கும் பணங்களை வெளி நாடுகளில் முதலீடு செய்து வைத்துள்ளார்கள். இங்கு குமாஷ்தாக்களாக இருப்பவர்கள் அப்போதும் தங்கள் வேலை பரி போகாமல் பாதுகாத்துக்கொள்ளவும், அதிலும் சிக்கல் வருமாயின் அவர் அவர் தம் குல தொழில் செய்து பிழைக்கவும் தயாராகி கொள்ளுவோம். ஆனால் அப்போதும் நாட்டை சுரண்டும் ஓநாய்களிடமிருந்தும், செல்வங்களை கொள்ளை அடித்து கொண்டிருக்கும் ஐயோக்கியர்களிடமிருந்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை பற்றி கவலை படாமல் முதலாளிகளுக்கு  கூட்டி கொடுத்து பிழைப்பு நடத்தி கொண்டிற்றுக்கும் அரசியல் வாதிகளை நாம் எதுவுமே செய்ய போவது இல்லை. மீண்டும் தேர்தல் வரும், இலவசங்களை வழங்கும் அறிக்கைகள் வரும் அதை பற்றி கொஞ்சம் பேசி விட்டு, தேர்தல் எந்த நாள் வரும் அந்த விடுமுறை நாளை எப்படி செலவளிக்கலாம் என்று மட்டுமே நம் கவலை. பொதுவாகவே வெளி நாட்டு தேர்தலை எந்த கண்ணோட்டத்தோடு பார்கிறோமோ அதே கண்ணோட்டம் நாம் ஓட்டு போடும் தேர்தலையும் பார்ப்பது தான் கொடுமை.

இதனால் தான் நம் கல்வி முறையில் கூட தெளிவான அரசியல் அறிவும், முறையான விழிப்புணர்வும் கொடுக்க படவில்லை. ஆனால் ஒரு பக்கம் பாலியல் கல்வி பற்றி மட்டும் விவாதிக்கிறோம். எங்கள் ஆட்சியில் தான் மக்களின் வாங்கும் சக்தியை அதிகபடுத்தி உள்ளோம் என்று மார் தட்டி கொள்ளும் மன்மோகன் சிங் அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை எந்த வித திட்டமும் இல்லாமல் ஏற்றிக்கொண்டு மக்கள் மீது சுமையை வைக்கிறது, ஒரு பக்கம் நாட்டை சுரண்டும் கொல்லைகூட்டதை பாராமுகமாக வைத்துக்கொண்டு கூட்டணியை காப்பாற்றி வைத்துக்கொள்வதில்அக்கறை காட்டுகிறது.

இத்தனை அக்கருமங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இதை எதுவுமே நடந்தது தெரியாதது போலவும், நாட்டில் மக்கள் எல்லாம் தங்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி, புளி ஏப்பத்தில் இருப்பவர்கள் போலவும் கருதி தமிழர் இறையான்மை வேண்டி மாநாடு நடத்துகிறார் போர்வாள் மீசைக்காரர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக  கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் மட்டும் என்ன தான் செய்வார். இன்றைக்கு தமிழ் நாட்டில் எந்த கட்சியையும் எதிர்க்கும் வல்லமை படைத்த ஒரே கட்சி அவருடையது தான், அவரிடம் மட்டுமே அத்தனை நெஞ்சுரம் படைத்த தொண்டர்கள் உண்டு, ஆனால் அவர் என்ன செய்ய முடியும் பாவம், தேர்தல் வர போகிறது இந்த முறை எப்படியும் 25 சீட்டும் பல கோடிகளும் இழக்க அவர் மட்டும் எப்படி விரும்புவார். 

இறுதியாக, அடுத்த ஆட்சி தமிழ் நாட்டில் ஜெயலலிதா வரலாம் என்று சிலர் கணிப்பு கூறுகிறார்கள், அப்படி ஏதேனும் நடுக்குமாயின் மேற்சொன்ன இந்திய அளவில் நடந்த மொத்த ஊழலும் தமிழ் நாட்டில் மட்டுமே நடந்தாலும் ஆச்சர்யமில்லை.

Monday, December 27, 2010

எஸ். ராமகிருஷ்ணன்; கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள்

கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழில் வெளியான மொழிபெயர்ப்பு நாவல்களில் எனக்கு விருப்பமான நூறு நாவல்கள் இவை. இதில் சில மீண்டும் பதிப்பிக்கபடவில்லை. சில யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற தகவலைக் கண்டறிவது கூட சிரமமாக இருக்கிறது. சில புதிய பதிப்புகள் வெளிவந்துள்ளன.  சிறந்த 

1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா
3) புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா
4) கசாக்குகள் - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா
5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா
6) சூதாடி - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா
7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா
8) யாமா -குப்ரின் ரஷ்யா
9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா
10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா
11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா
12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா
13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா
14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் -ரஷ்யா
15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா
16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா
17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா
18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா
19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா
20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்
21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு
22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா
23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி
24) யூஜினி – பால்சாக் – பிரான்சு
25) மாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே
26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே
27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் -அமெரிக்கா
28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா
29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்
30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து
31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு
32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து
33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா
34) கடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா
35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா
36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து
37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்
38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி
39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா
40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி
41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி
42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து
43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்
44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு
45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு
46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு
47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்
48) விசாரணை -காப்கா ஜெர்மனி 
49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா
50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா
51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி
52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி
53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்
54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா
55) நாநா – எமிலி ஜோலா -பிரான்சு
56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா
57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல்
58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.
59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா
60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா
61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.
62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.
63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து
64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து
65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.
66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி
67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்
68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி
69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்
70) கயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்
71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் -கன்னடம்
72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்
73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்
74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது
75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்
76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்
77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்
78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்
79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்
80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்
81) பாண்டவபுரம் சேது – மலையாளம்
82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது
83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்
84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்
85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்
86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்
87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்
88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்
89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்
90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி
91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்
92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி
93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.
94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி
95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்
96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி
97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு
98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.
99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்
100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்

சிறுகதை: மலை கோட்டையிலிருந்து மெரினாவுக்கு......

மயில்வண்ணன் திருச்சியில் தான் பணி புரிந்துகொண்டிருந்த நிறுவனத்திலிருந்து சென்னையில் வேறொரு நிறுவனத்தில் புதிதாக பணி கிடைத்ததும் சென்னைக்கு போய் விட்டான், அந்த நாளிலிருந்து தான் அவள் வீட்டில், அலுவலகத்தில், தோழிகளிடத்தில், ஏன் தான் பிம்பமாக நினைத்து கொண்டிருக்கும் தான் தாயிடம் கூட அவளால் இருப்பு கொள்ள முடிய வில்லை.

அவள் கல்விக்கும் தகுதிக்கும், அவள் ஆங்கில புழமைக்கும் அவள் கல்லூரி முடித்த ஒரு மாதத்திலேயே இரண்டு நிறுவனங்கள் அப்போது அவள் தந்தை வாங்கும் அளவு ஊதியத்திற்கு வேலை அளித்தது, பணி பெங்களூர் மற்றும் சென்னை என்பதால் அவள் அந்த காவேரி கரையை தண்டவே முடியாது என்று மறுத்து விட்டாள். இது வரை எந்த வரம்பையும் போதிக்கத அவள் அம்மாவிடமிருந்து தினம் தினம் பெண்மையை கற்றுக்கொண்டு இருந்தாள், சிறு பிராயத்திலிருந்தே இரண்டு விசியங்கள் அவளை அங்கு ஈர்ப்புடன் வைத்திருந்தது, ஒன்று அவள் அம்மா, இன்னொன்று ரங்கநாதர். அவள் பெண்ணாக இருப்பதே அவள் அம்மா போல் ஆக வேண்டும் என்பதற்காக தான், அத்தனை பண்புகளையும் ஆசைகளையும் தான் பிறந்ததிலிருந்து ரங்கநாதருக்கு காணிக்கையிட சேர்த்து வைத்ததாய் காத்து வந்தாள்.

மயில்வண்ணனை முதன் முதலாக அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவளுக்கான நேர்முக தேர்வில் தான் சந்தித்தாள், பார்த்ததும் அவன் பிம்பம் இவளுக்குள் ஒட்டிகொண்டது. நேர்முக தேர்வும் மயில்வண்ணனே எடுத்தான், மற்ற  அனைவருக்கும் நேர்முக தேர்வை எதிர்கொள்ளும் பயத்தில் நெஞ்சு படபடத்தது, இவளுக்கோ அது ஒரு அத்தியாயமாய் அதை எப்படி கடக்க போகிறாள் என்று இருந்தது. ஏன் அவனை பிடித்தது என்று அவளுக்கு இன்று வரை விளங்கவில்லை. பார்வையாளர்கள் அறையில் அமர்ந்திருந்த விண்ணப்ப தாரர்களை வரிசை படுத்த வந்த போதுதான் அவனை அவள் முதன் முறை பார்த்தாள். அவன் ஒன்றும் அவளவு அழகும் இல்லை, சுமாரான நிறம், நல்ல உயரம், நாகரிக உடை, முகத்தில் ஒரு அமைதி இது மட்டும் தான் அவனை பற்றிய அடையாளம். ஆனால் இவனுக்குதான் காத்திருந்தாளோ என்னவோ?அவனை பார்த்த நொடியில்  அவள் உடலில் சீராக ஓடிகொண்டிருந்த ரத்தம் மொத்தமும் இதயத்தில் வந்து கொட்டியதாய் உணர்ந்தாள்.

ஒவொருவராக நேர்முக தேர்விற்கு அழைக்க பட்டார்கள், அவளுக்கு முன் இருந்தவர்கள் ஒவொருவராய் குறையக்  குறைய இவள் நாடி துடிப்பு அதிகமாகி கொண்டிருந்தது, மூச்சு சீர் கெட்டு நின்று விடும் போல் இருந்தது, இதயம் துடிக்கிறதா  இல்லை அதுவும் மறந்து விட்டதா என்றே அவளுக்கு தெரிய வில்லை. அவளுக்கு அப்போது நினைவெல்லாம் எப்படி அவனை நேருக்கு நேர் சந்திப்பதென்று.

அதற்கு முன் சந்தித்த நேர்முக தேர்வுகள் எல்லாம் மூன்று முதல் ஐந்து சுற்றுகள், எந்த பதற்றமும் இல்லாமல் காய் கறி கடையில் போய் காய்கறி வாங்குவது போல் சாதரணமாக அணுகினாள். இத்தனைக்கும் ஊதியத்தில் மயில்வண்ணன் நிறுவனம் சொன்னதை போல் மூன்று மடங்கு அதிகம். இந்த பதற்றத்தை அவள் இதற்கு முன் அனுபவித்தும் இல்லை சந்தித்ததும் இல்லை. அம்மாவிடம் போனில் சொல்லிவிட்டு வீட்டுக்கு போய் விடலாமா என்று கூட யோசித்தாள், அதற்குள் மீனாட்சி, என்று அவள் பெயர் சொல்லி மயில் நேர்முக தேர்வு அறைக்குள் அழைத்தான்,
உட்காருங்க,
tel about your self என்றான் மயில்,
தன்னை பற்றிய சுய விவரணை சொன்ணாள், மேலும் அவள் கல்வி, குடும்ப பின்னணி என்று அடுத்தடுத்த கேள்விகள் என்று கேட்டு கொண்டிருந்தார்கள் மயில்வண்ணனும் இன்னொரு அந்த நிறுவன அதிகாரியும், இவளுக்கு என்னவோ தன்னை முதன் முதலாக பெண் பார்க்க வந்தவர்கள் கேட்க்கும் கேள்வியாகவே பட்டது, ஒரே வித்தியாசம் மயில் காபி குடிக்கும் படி கூறினான்.

அவளுக்கு நினைவு தெரிந்து இரவில் ஒருத்தருக்கு தூக்கம் வராமல் கூட இருக்குமா? என்று பட்டது. ஆனால் எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் அவள் அறைக்குள் வர மறுத்து  வெளியே ஜன்னல் வழியாக இருளோடு இருளாய் கரைந்து கொண்டு இருந்தது. அவள் தூங்குவதற்கு முன்பே வழுகட்டயமாக யாரோ இரவை விரட்டிவிட்டதாக பட்டது, அது அறை கதவை தட்டிய அவள் அம்மாவா இல்லை அந்த மயில்வண்ணனா என்று தான் புரிய வில்லை.

மூன்று நாள் கழித்து பணியில் சேருவதற்காக கிளம்பினாள், அன்றைக்கு தான் அவளிடம் எத்தனை புடவை, சுடிதார் இருக்கிறதென்றே அவளுக்கு தெரியும். அத்தனை ஆடைகளையும் பிரித்து பிரித்து அரை முழுக்க பரப்பி விட்டிருந்தாள், ஆனால் இன்னும் எதை உடுத்த போகிறாள் என்று முடிவாக வில்லை. இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள் என்று பார்க்க அறையில் நுழைந்த அவள் அம்மாவுக்கு தலையே சுற்றி விட்டது.
" ஏன்டி நீ வேலைக்கு போறன்னு நீ திரும்பி வர வரைக்கும் இந்த துணியெல்லாம் மடிச்சி வைக்கனும்னு எனக்கு வேலை வச்சிட்டு போறயா?" என்று கேட்டது கூட காதில் விழாமல் கிளம்பினாள். அவளோடு சேர்ந்த மற்ற அனைவருக்கும் நிறுவன அறிமுக நிகழ்ச்சி மயில்வண்ணன் தான் நடத்தினான். அவள் கதையில் கேட்டது, படித்தது போன்ற அணைத்து காவியமும் அவள் முன் நடந்து கொண்டிருந்தது, அங்கு இருந்த அனைவரயும் விட இவள் தான் கூர்மையாக கவனித்துகொண்டு இருந்தாள், ஆனால் அவன் நிறுவனத்தை பற்றி கூறிய பிரக்ஞை எதுவும் இல்லை. அவன் மட்டுமே அவளை ஆட்கொண்டு இருந்தான். இவள் தவற விட்ட பேனாவை அவன் எடுத்து கொடுத்தது கூட அவளுக்கு அன்பளிப்பாக பட்டது.

ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் வந்து அவனை பார்த்த பிறகே அவள் காலை விடிந்தது. அவன் இருந்தது தரை தளத்தில், அவளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையோ முதல் தளத்தில். அலுவலகம் என்றல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் அளவு, அல்லது பார்த்து கொண்டே இருக்கும் அமைப்பாக இருக்கும் என்று நினைத்தாள், ஆனால் வேறு வேறு தளமாக இருந்தது எரிச்சலாய் வந்தது. எத்தனை முறை எத்தனை காரணம் சொல்லி மட்டும் கீழ் தளம் வர முடியும். அவன் நிர்வாக பிரிவு இவள் தொழில் நுட்ப உற்பத்தி பிரிவு. அவனை பார்க்க அல்லது பார்த்து கொண்டே இருக்க என்ன செய்வதென்றே புரியவில்லை. காலையில் வருகை பதிவு கையெழுத்து போடும் நேரம், தேனீர் வேளை, சாதாரண இடைவேளை, தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்ப சந்தேகம் கேட்க தொலைபேசி அழைக்க என ஒரு நாளைக்கு எத்தனை முறை அவனை பார்க்க சந்தர்ப்பம் உருவாக்க முடியுமோ அத்தனை முறையும் தவற விடாமல் செய்தாள்.

எத்தனை நாள், எத்தனை வாரம் கழித்து கேட்டாலும் எந்த நாள் என்ன உடை அவன் அணிந்திருந்தான், எப்போது அவன் முடி வெட்டினான், எப்போது சவரம் செய்து கொண்டு வந்தான், எந்த நாள் அவனுக்கு பிறந்த நாள், அதுவும் அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து எந்த நாள் என்று கூட சொல்லும் அளவுக்கு அவனை பற்றிய எல்லாம் அதுபடி.

மயில்வண்ணன் மதிய உணவை அருகில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் தான் தினமும் சாப்ப்பிடுவான், இவள் அதற்காகவே தன் வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை மறுதலித்து விட்டுஅந்த நேரத்தில் அவனை பார்க்க வேண்டும் என்று அந்த உணவு விடுதிக்கும் அலுவலகத்திற்கும் நடந்து கொண்டு இருப்பாள். ஒரு நாள் அங்கு இருக்கும் ஐஸ் க்ரீம் கடையில் அவள் தோழியோடு ஐஸ் க்ரீம் சாப்பிட சென்ற போது அவன் எதேச்சையாக அங்கு  ஐஸ் க்ரீம் சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து அவள் அந்த பனியை விட வேகமாக உருகினாள்.

அடுத்த நாள் மயில் வண்ணன் அந்த நிறுவன் ஊழியர்களுக்கு அனைவருக்கும் ஒரு அறிவிப்பு கொடுத்தான், மீனாட்சியை பற்றி இது எதுவுமே அவனுக்கு தெரியாது.

" நண்பர்களே, எனக்கு சென்னையில் வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதால், நான் இந்த நிறுவனத்திலிருந்து என் பணியை ராஜினாமா செய்கிறேன், நான் இங்கு பணி புரிந்த நாட்களில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்"

இப்படிக்கு

மயில்வண்ணன்.

Wednesday, December 15, 2010

தேகமும் தம்மமும்

தேகம் நாவல் பற்றி மதிப்புறைகளை சாருவின் வாசகர்கள் அனைவரும் எழுத போகிறார்கள், அதற்கு முன் அந்த நாவலை பற்றிய மதிப்புரை வழங்கிய மிஷ்கின் பேச்சு பற்றி சில.....

நந்தலாலா சிக்குஜிரோவின் நகல் என்பதில் பார்வையாளர்களுக்கும் மிஷிகினுக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை, நம்மை பொறுத்த வரை முழு படமும், அவரை பொறுத்த வரை நான்கு கட்சிகள்...... போகட்டும்,

தண்ணி அடிக்கும் போது நட்பாகும் நீதியை போலத்தான் மிஷ்கின் சாருவுக்கு நட்பாகி இருப்பாரோ என்னவோ, ஆனால் அவரை இலக்கிய மேடை வரை கூட்டி வந்து வாசகர்களையும் அவரையும் அவமான படுத்தி கொள்வது இதுவே கடைசி மேடையாக இருக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

நந்தலாலாவும் சரி சித்திரம் பேசுதடியும் சரி தழுவல் என்பது அவர் கூற்று.  ஆனால் எந்த ஒரு புத்தகமும் எதை காபி அடித்து  எழுத படுவது இல்லை, இன்னும் ஒரு படி கீழிறங்கி பேசினால், சினிமா என்பது மூன்று மணி நேரம் பொழுது போக்குக்காக பயன் படுத்தப்படும் ஊடகம், ஆனால் ஒரு நூல் என்பது அறிவை விருத்தி படுத்தி கொள்ள ஒரு தேடுதல் நோக்கு உள்ளவர்கள் வாசிக்கும் கலை, ஒரு சினிமாவை பார்த்து விட்டு ஒருவன் தான் எதுவும் கற்று கொண்டதாக கூற முடியாது (சினிமா காரரை தவிர ) ஆனால் ஒரு நூல் என்பது.......... சரி இந்த விவரங்கள் எதுவும் தேவை இல்லை. அதுவும் சாருவை போல ஒரு உலக தரம் வாய்ந்த எழுத்தை, பல்கலை கழகங்களில் பட புத்தகமாக வைக்கப்பட்ட ஒரு நூல் எழுதிய எழுத்தாளனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அந்த நூல் பற்றி பேசாமல், அதுவும் அந்த நூலை நான் முழுசாக படிக்க வில்லை என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கூறுகிறார், ஆனால் இன்னும் பதினெட்டு வருடங்கள் படிக்க நூல்கள் வாங்கி என்ன செய்ய போகிறார் என்று தெரிய  வில்லை.

ஒரு மேடையில் சாரு மீஷ்கினை பற்றி சொன்னார் " மிஷ்கினின் உதவி இயக்குனர் ஒருவர் அவரிடம் கேட்கிறார், ஒரு நல்ல படம் எடுக்க என்ன செய்ய வேண்டும் ? என்று, அதற்க்கு மிஷ்கின், முதலில் நீ நல்லவனாக இருக்க வேண்டும் என்று"  இப்படி கூறி புளங்காகிதம் அடைந்த எழுத்தாளனின் புத்தகத்தை கூட படிக்காமல், அதற்க்கு மதிப்புரை வழங்க வந்து அதையும் செய்யாமல் குறைந்தது அந்த எழுத்தாளனை பற்றி பேசாமல் சுய புராணம் பாடிய குறைந்த பட்சம் சபை நாகரிகம் கூட இல்லாத ஒருத்தர் எப்படி ஒரு நல்ல படைப்பை கொடுக்க முடியும். விழா நாயகனும் அவருக்கான பார்வையாளர்களையும் தன் போக்கில் தான் தோன்றி தனமாக மதிப்பிடும் ஒருவர் கண்டிப்பாக பார்வையாளனின் ரசனைக்கு சுயமாக ஒரு நல்ல படைப்பை கொடுக்கவே முடியாது. ஜீரோ டிகிரியும் , ராஸ லீலாவும், தேகமும் ஏற்படுத்திய மன உணர்வுகளை ஒரு இயக்குனராக அவரால் எத்தனை கோடி செலவு செய்தும் ஏற்படுத்தவே முடியாது.

மிஷ்கின் தன்னிலை விளக்கம் கொடுக்க விரும்பினால் அவராக ஒரு கருத்தரங்கு வைக்க வேண்டும், அதற்கு அழைப்பு கொடுத்து அந்த மேடையில் பேச வேண்டும், அதை விடுத்து வரும் மேடைகளில் எல்லாம் சுய புராணம், பிலிம் சேம்பரில் அவர் கூறுகிறார், அவர்  ஒரு இயக்குனராக இருக்க மற்றவர்கள் எல்லாம் பொறாமை பட வேண்டுமாம், சுயமாக சிந்தித்து சுயமாக ஒரு நூல் எழுதி அதன் மூலம் வாசகர்களை தன் வசம் வைத்திருக்கும் ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும், இதில் அவரை பார்த்து யார் பொறாமை பட வேண்டும் என்று நினைக்கிறார் என்று தெரிய வில்லை, ஒரு வேலை அது அவருடைய உதவி இயக்குனர்களுக்கு சொன்ன செய்தியோ என்னவோ?

ஒரு பின் நவீன, நான் லீனியர் படைப்புக்கும், கிளர்ச்சி ஊட்டும் படைப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் ஒருத்தர் எத்தனை ஆயிரம் புத்தகம் வாங்கி தான் என்ன பயன். நேற்று இரவு தேகம் நாவலை வாசிக்கும் போது ஏற்பட்ட பரவசம் சொல்லி விளக்க முடியாது, ஒரு ஜென் தத்துவத்தை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. முதலில் இருக்கும் இரண்டு பக்கத்தில் வரும் ஆண் குறி, புட்டம், பேருந்தில் பெண்களை உரசுவது, போன்ற வார்த்தைகளை வைத்து நுனிப்புல் மேய்ந்து விட்டு ஒரு நூல் தரத்தை மதிப்பிடுவதை விட  ஒரு அறிவிழி தனம் எதுவும் இருக்க முடியாது. இதில் வசனம் எழுதி பாருங்கள் அப்போ தெரியும் கஷ்டம் என்று ஒரு இறுமாப்பு வேறு.

"தேகம்" முழுவதும் வதை படுத்துவதை உணர்த்துவதாகவே உள்ளது, இது ஒவ்வொரு மனதிற்குள்ளும் இருக்கும் துவேஷ மனநிலையை படம் பிடிக்கிறது, எல்லாரிடமும் எதோ ஒரு வகையில் ஒரு தர்மா வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் இந்த மனநிலையிலிருந்து விடுபடவே இந்த நூல் உதவும் என்பது என் பார்வை, ஆசையே துன்பத்திற்கு காரணம், பிற உயிரை வதை படுத்த கூடாது என்ற தம்ம பதம் இந்த நூலில் தற்கால சூழலுக்கு ஏற்றவாறு கொடுத்து இருக்கிறார். இப்படியான ஒரு ஜென் ததுவதங்களையும் புத்த தம்மத்தையும் வழியுறுத்தும் ஒரு தத்துவார்த்த படைப்பை பற்றி பேசாமல்  சுய புராணம் பேசும், சபை நாகரிகம் இல்லாத ஒருவரை பேச சொன்னால் இந்த மாதிரியான மனஉளைச்சல் தான் மிச்சம்.

அன்புடன்

ரஸவாதி
http://rashavathi.blogspot.com/

Saturday, December 11, 2010

நீரா ராடியவும் இந்தியாவில் தனி மனித சுதந்திரமும்

இந்திய துணை கண்டம் தன்னை சுதந்திர நாடாக அறிவித்து கொண்டு தனக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு வடிவத்தையும் கொண்டு செயல் படுகின்றது, இதன் அடிப்படியில் உருவான அரசியல் கட்சிகளும் அவர் தம் மந்த்ரிகளும் அடிப்படை தொண்டர்களாக இருந்து அவர்கள் மார் தட்டிக்கொள்ளும் தங்கள் கட்சி கொள்கையாலும் அவர்கள் திறமையாலுமே முன்னேறி இருப்பது  (ஒரு லட்சத்து எழுபத்தாரயிரம் கோடி சம்பாதிக்கும் அளவுக்கு) ஒவ்வொரு இந்தியனும் தானும் முன்னேற இந்தியாவில் வாய்ப்பு உள்ளதாகவே நம்பிக்கை ஏற்படுத்தும், அது மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் அமைப்பு மீதும்  நம்பிக்கை ஏற்படுத்தும்.

இந்த வகையில் இந்திய அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை காப்பாற்றி வைத்துள்ளது என்பது இன்றைய அரசியல் வாதியின்  அறைகூவலாக வெளி வந்தாலும் வரலாம்.

ஆனால் இப்போதைய பிரச்சனை இந்த ஜனநாயகம் உண்மையாகவே மக்களுக்கானத என்பது தான். 2G ஊழலில் பிரதான சாட்சியாக இருக்கும் நீரா ராடியவின் இது சம்பதந்தமாக ஒட்டு கேட்கப்பட்ட/பதிவு செய்யப்பட்ட சாட்சி தான் இப்போதைய விவாத பொருள்.

1 .ஊழல் நடந்த விவரத்தை  தொலை பேசியில் பேசியிருப்பதை பதிவு செய்து வைத்துகொண்டு ஆதாரம் காட்டுவது சிறந்த ஆதாரம் தான். ஆக ஊழல் நடக்க போவது முன் கூட்டியே தெரிந்த்ருக்க வேண்டும்.

                                             (அல்லது)
2  இந்தியாவில் உள்ள அணைத்து செல் போன் பேச்சுக்களும் பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.

இங்கு ராடியவுக்கு வக்காலத்து வாங்கவோ அவர்கள் ஊழல் சரி என்று வாதிடுவதோ நம் வேலை இல்லை, எப்படியும் முன்னால் அமைச்சர் பதிவி விலகி தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்று கொண்டது போல் இவருக்கும் ஒரு மாதம் இந்தியாவில் இல்லாமல் உலகை சுற்றி வரும் அதிக பட்ச தண்டனை ஏதும் வழங்க படலாம், ஆனால் குற்றம் நடக்கும் போது எல்லாம் சும்மா இருந்து விட்டு பங்கு பிரிக்கும் நேரத்தில் தனக்கு கொடுக்க  படும் பங்கில் திருப்தி இல்லாமல் சிக்கலை திசை திருப்புவது தான் சாமர்த்தியம்.

இப்போது விசியத்துக்கு வருவோம் ; ஒரு குடிமகனின் தனி பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது என்பது தான் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளின் சாராம்சம், இதில் முதல் உரிமையே பேச்சு உரிமை தான், Article 19 ன் படி ஒரு இந்தியனுக்கு தனுக்கு தேவையானதை பேச உரிமை அளிக்கிறது, ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்க கூடாது என்பது விதி. இங்கு ராடியா பேசியது மேற்கண்ட விதிக்கு எதிராக இருந்தால் தாரளமாக தேசிய பாது காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்க வேண்டும். அப்படி அவர் இந்த விதிக்கு குந்தகம் விளைய வைக்க  வில்லையெனில் ஒட்டு கேட்ட/பதிவு செய்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இது இரண்டுமே நடக்க போவது இல்லை, மாறாக எதோ ஒரு மூலையில் ஒரு சாமான்ய மனிதன் செய்ய போகும் அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்களின் கோவத்திற்கு ஆளாக போகின்றவரின் மீது இதை போன்ற ஆதாரங்களை காட்டி இந்த அரசு எந்திரம் பாயும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க போவது இல்லை, ஏனெனில் கன்னியா  குமரியில் ரூ 500 வாங்கிய அதிகாரி கைது என்று செய்தி தாளில் விளம்பரம் கொடுக்கும் நமது அரசு, இது வரை எந்த அரசியல் வாதியையும் லஞ்ச வழக்கில் கைது செய்ததாக செய்தி வந்ததில்லை.

ஆக இனிமேல் ஒரு சாதாரண குடி மகன் நிம்மதியாக தான் வீட்டில் வாழ முடியுமா நமது படுக்கை அறையில் தான் படுத்து உறங்குகிறோம் என்ற நம்பிக்கை இருக்குமா என்பது தான் நமக்கு முன் நிற்கும் கேள்வி.