Saturday, December 11, 2010

நீரா ராடியவும் இந்தியாவில் தனி மனித சுதந்திரமும்

இந்திய துணை கண்டம் தன்னை சுதந்திர நாடாக அறிவித்து கொண்டு தனக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு வடிவத்தையும் கொண்டு செயல் படுகின்றது, இதன் அடிப்படியில் உருவான அரசியல் கட்சிகளும் அவர் தம் மந்த்ரிகளும் அடிப்படை தொண்டர்களாக இருந்து அவர்கள் மார் தட்டிக்கொள்ளும் தங்கள் கட்சி கொள்கையாலும் அவர்கள் திறமையாலுமே முன்னேறி இருப்பது  (ஒரு லட்சத்து எழுபத்தாரயிரம் கோடி சம்பாதிக்கும் அளவுக்கு) ஒவ்வொரு இந்தியனும் தானும் முன்னேற இந்தியாவில் வாய்ப்பு உள்ளதாகவே நம்பிக்கை ஏற்படுத்தும், அது மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் அமைப்பு மீதும்  நம்பிக்கை ஏற்படுத்தும்.

இந்த வகையில் இந்திய அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை காப்பாற்றி வைத்துள்ளது என்பது இன்றைய அரசியல் வாதியின்  அறைகூவலாக வெளி வந்தாலும் வரலாம்.

ஆனால் இப்போதைய பிரச்சனை இந்த ஜனநாயகம் உண்மையாகவே மக்களுக்கானத என்பது தான். 2G ஊழலில் பிரதான சாட்சியாக இருக்கும் நீரா ராடியவின் இது சம்பதந்தமாக ஒட்டு கேட்கப்பட்ட/பதிவு செய்யப்பட்ட சாட்சி தான் இப்போதைய விவாத பொருள்.

1 .ஊழல் நடந்த விவரத்தை  தொலை பேசியில் பேசியிருப்பதை பதிவு செய்து வைத்துகொண்டு ஆதாரம் காட்டுவது சிறந்த ஆதாரம் தான். ஆக ஊழல் நடக்க போவது முன் கூட்டியே தெரிந்த்ருக்க வேண்டும்.

                                             (அல்லது)
2  இந்தியாவில் உள்ள அணைத்து செல் போன் பேச்சுக்களும் பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.

இங்கு ராடியவுக்கு வக்காலத்து வாங்கவோ அவர்கள் ஊழல் சரி என்று வாதிடுவதோ நம் வேலை இல்லை, எப்படியும் முன்னால் அமைச்சர் பதிவி விலகி தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்று கொண்டது போல் இவருக்கும் ஒரு மாதம் இந்தியாவில் இல்லாமல் உலகை சுற்றி வரும் அதிக பட்ச தண்டனை ஏதும் வழங்க படலாம், ஆனால் குற்றம் நடக்கும் போது எல்லாம் சும்மா இருந்து விட்டு பங்கு பிரிக்கும் நேரத்தில் தனக்கு கொடுக்க  படும் பங்கில் திருப்தி இல்லாமல் சிக்கலை திசை திருப்புவது தான் சாமர்த்தியம்.

இப்போது விசியத்துக்கு வருவோம் ; ஒரு குடிமகனின் தனி பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது என்பது தான் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளின் சாராம்சம், இதில் முதல் உரிமையே பேச்சு உரிமை தான், Article 19 ன் படி ஒரு இந்தியனுக்கு தனுக்கு தேவையானதை பேச உரிமை அளிக்கிறது, ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்க கூடாது என்பது விதி. இங்கு ராடியா பேசியது மேற்கண்ட விதிக்கு எதிராக இருந்தால் தாரளமாக தேசிய பாது காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்க வேண்டும். அப்படி அவர் இந்த விதிக்கு குந்தகம் விளைய வைக்க  வில்லையெனில் ஒட்டு கேட்ட/பதிவு செய்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இது இரண்டுமே நடக்க போவது இல்லை, மாறாக எதோ ஒரு மூலையில் ஒரு சாமான்ய மனிதன் செய்ய போகும் அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்களின் கோவத்திற்கு ஆளாக போகின்றவரின் மீது இதை போன்ற ஆதாரங்களை காட்டி இந்த அரசு எந்திரம் பாயும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க போவது இல்லை, ஏனெனில் கன்னியா  குமரியில் ரூ 500 வாங்கிய அதிகாரி கைது என்று செய்தி தாளில் விளம்பரம் கொடுக்கும் நமது அரசு, இது வரை எந்த அரசியல் வாதியையும் லஞ்ச வழக்கில் கைது செய்ததாக செய்தி வந்ததில்லை.

ஆக இனிமேல் ஒரு சாதாரண குடி மகன் நிம்மதியாக தான் வீட்டில் வாழ முடியுமா நமது படுக்கை அறையில் தான் படுத்து உறங்குகிறோம் என்ற நம்பிக்கை இருக்குமா என்பது தான் நமக்கு முன் நிற்கும் கேள்வி.

No comments:

Post a Comment