Monday, December 27, 2010

சிறுகதை: மலை கோட்டையிலிருந்து மெரினாவுக்கு......

மயில்வண்ணன் திருச்சியில் தான் பணி புரிந்துகொண்டிருந்த நிறுவனத்திலிருந்து சென்னையில் வேறொரு நிறுவனத்தில் புதிதாக பணி கிடைத்ததும் சென்னைக்கு போய் விட்டான், அந்த நாளிலிருந்து தான் அவள் வீட்டில், அலுவலகத்தில், தோழிகளிடத்தில், ஏன் தான் பிம்பமாக நினைத்து கொண்டிருக்கும் தான் தாயிடம் கூட அவளால் இருப்பு கொள்ள முடிய வில்லை.

அவள் கல்விக்கும் தகுதிக்கும், அவள் ஆங்கில புழமைக்கும் அவள் கல்லூரி முடித்த ஒரு மாதத்திலேயே இரண்டு நிறுவனங்கள் அப்போது அவள் தந்தை வாங்கும் அளவு ஊதியத்திற்கு வேலை அளித்தது, பணி பெங்களூர் மற்றும் சென்னை என்பதால் அவள் அந்த காவேரி கரையை தண்டவே முடியாது என்று மறுத்து விட்டாள். இது வரை எந்த வரம்பையும் போதிக்கத அவள் அம்மாவிடமிருந்து தினம் தினம் பெண்மையை கற்றுக்கொண்டு இருந்தாள், சிறு பிராயத்திலிருந்தே இரண்டு விசியங்கள் அவளை அங்கு ஈர்ப்புடன் வைத்திருந்தது, ஒன்று அவள் அம்மா, இன்னொன்று ரங்கநாதர். அவள் பெண்ணாக இருப்பதே அவள் அம்மா போல் ஆக வேண்டும் என்பதற்காக தான், அத்தனை பண்புகளையும் ஆசைகளையும் தான் பிறந்ததிலிருந்து ரங்கநாதருக்கு காணிக்கையிட சேர்த்து வைத்ததாய் காத்து வந்தாள்.

மயில்வண்ணனை முதன் முதலாக அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவளுக்கான நேர்முக தேர்வில் தான் சந்தித்தாள், பார்த்ததும் அவன் பிம்பம் இவளுக்குள் ஒட்டிகொண்டது. நேர்முக தேர்வும் மயில்வண்ணனே எடுத்தான், மற்ற  அனைவருக்கும் நேர்முக தேர்வை எதிர்கொள்ளும் பயத்தில் நெஞ்சு படபடத்தது, இவளுக்கோ அது ஒரு அத்தியாயமாய் அதை எப்படி கடக்க போகிறாள் என்று இருந்தது. ஏன் அவனை பிடித்தது என்று அவளுக்கு இன்று வரை விளங்கவில்லை. பார்வையாளர்கள் அறையில் அமர்ந்திருந்த விண்ணப்ப தாரர்களை வரிசை படுத்த வந்த போதுதான் அவனை அவள் முதன் முறை பார்த்தாள். அவன் ஒன்றும் அவளவு அழகும் இல்லை, சுமாரான நிறம், நல்ல உயரம், நாகரிக உடை, முகத்தில் ஒரு அமைதி இது மட்டும் தான் அவனை பற்றிய அடையாளம். ஆனால் இவனுக்குதான் காத்திருந்தாளோ என்னவோ?அவனை பார்த்த நொடியில்  அவள் உடலில் சீராக ஓடிகொண்டிருந்த ரத்தம் மொத்தமும் இதயத்தில் வந்து கொட்டியதாய் உணர்ந்தாள்.

ஒவொருவராக நேர்முக தேர்விற்கு அழைக்க பட்டார்கள், அவளுக்கு முன் இருந்தவர்கள் ஒவொருவராய் குறையக்  குறைய இவள் நாடி துடிப்பு அதிகமாகி கொண்டிருந்தது, மூச்சு சீர் கெட்டு நின்று விடும் போல் இருந்தது, இதயம் துடிக்கிறதா  இல்லை அதுவும் மறந்து விட்டதா என்றே அவளுக்கு தெரிய வில்லை. அவளுக்கு அப்போது நினைவெல்லாம் எப்படி அவனை நேருக்கு நேர் சந்திப்பதென்று.

அதற்கு முன் சந்தித்த நேர்முக தேர்வுகள் எல்லாம் மூன்று முதல் ஐந்து சுற்றுகள், எந்த பதற்றமும் இல்லாமல் காய் கறி கடையில் போய் காய்கறி வாங்குவது போல் சாதரணமாக அணுகினாள். இத்தனைக்கும் ஊதியத்தில் மயில்வண்ணன் நிறுவனம் சொன்னதை போல் மூன்று மடங்கு அதிகம். இந்த பதற்றத்தை அவள் இதற்கு முன் அனுபவித்தும் இல்லை சந்தித்ததும் இல்லை. அம்மாவிடம் போனில் சொல்லிவிட்டு வீட்டுக்கு போய் விடலாமா என்று கூட யோசித்தாள், அதற்குள் மீனாட்சி, என்று அவள் பெயர் சொல்லி மயில் நேர்முக தேர்வு அறைக்குள் அழைத்தான்,
உட்காருங்க,
tel about your self என்றான் மயில்,
தன்னை பற்றிய சுய விவரணை சொன்ணாள், மேலும் அவள் கல்வி, குடும்ப பின்னணி என்று அடுத்தடுத்த கேள்விகள் என்று கேட்டு கொண்டிருந்தார்கள் மயில்வண்ணனும் இன்னொரு அந்த நிறுவன அதிகாரியும், இவளுக்கு என்னவோ தன்னை முதன் முதலாக பெண் பார்க்க வந்தவர்கள் கேட்க்கும் கேள்வியாகவே பட்டது, ஒரே வித்தியாசம் மயில் காபி குடிக்கும் படி கூறினான்.

அவளுக்கு நினைவு தெரிந்து இரவில் ஒருத்தருக்கு தூக்கம் வராமல் கூட இருக்குமா? என்று பட்டது. ஆனால் எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் அவள் அறைக்குள் வர மறுத்து  வெளியே ஜன்னல் வழியாக இருளோடு இருளாய் கரைந்து கொண்டு இருந்தது. அவள் தூங்குவதற்கு முன்பே வழுகட்டயமாக யாரோ இரவை விரட்டிவிட்டதாக பட்டது, அது அறை கதவை தட்டிய அவள் அம்மாவா இல்லை அந்த மயில்வண்ணனா என்று தான் புரிய வில்லை.

மூன்று நாள் கழித்து பணியில் சேருவதற்காக கிளம்பினாள், அன்றைக்கு தான் அவளிடம் எத்தனை புடவை, சுடிதார் இருக்கிறதென்றே அவளுக்கு தெரியும். அத்தனை ஆடைகளையும் பிரித்து பிரித்து அரை முழுக்க பரப்பி விட்டிருந்தாள், ஆனால் இன்னும் எதை உடுத்த போகிறாள் என்று முடிவாக வில்லை. இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள் என்று பார்க்க அறையில் நுழைந்த அவள் அம்மாவுக்கு தலையே சுற்றி விட்டது.
" ஏன்டி நீ வேலைக்கு போறன்னு நீ திரும்பி வர வரைக்கும் இந்த துணியெல்லாம் மடிச்சி வைக்கனும்னு எனக்கு வேலை வச்சிட்டு போறயா?" என்று கேட்டது கூட காதில் விழாமல் கிளம்பினாள். அவளோடு சேர்ந்த மற்ற அனைவருக்கும் நிறுவன அறிமுக நிகழ்ச்சி மயில்வண்ணன் தான் நடத்தினான். அவள் கதையில் கேட்டது, படித்தது போன்ற அணைத்து காவியமும் அவள் முன் நடந்து கொண்டிருந்தது, அங்கு இருந்த அனைவரயும் விட இவள் தான் கூர்மையாக கவனித்துகொண்டு இருந்தாள், ஆனால் அவன் நிறுவனத்தை பற்றி கூறிய பிரக்ஞை எதுவும் இல்லை. அவன் மட்டுமே அவளை ஆட்கொண்டு இருந்தான். இவள் தவற விட்ட பேனாவை அவன் எடுத்து கொடுத்தது கூட அவளுக்கு அன்பளிப்பாக பட்டது.

ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் வந்து அவனை பார்த்த பிறகே அவள் காலை விடிந்தது. அவன் இருந்தது தரை தளத்தில், அவளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையோ முதல் தளத்தில். அலுவலகம் என்றல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் அளவு, அல்லது பார்த்து கொண்டே இருக்கும் அமைப்பாக இருக்கும் என்று நினைத்தாள், ஆனால் வேறு வேறு தளமாக இருந்தது எரிச்சலாய் வந்தது. எத்தனை முறை எத்தனை காரணம் சொல்லி மட்டும் கீழ் தளம் வர முடியும். அவன் நிர்வாக பிரிவு இவள் தொழில் நுட்ப உற்பத்தி பிரிவு. அவனை பார்க்க அல்லது பார்த்து கொண்டே இருக்க என்ன செய்வதென்றே புரியவில்லை. காலையில் வருகை பதிவு கையெழுத்து போடும் நேரம், தேனீர் வேளை, சாதாரண இடைவேளை, தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்ப சந்தேகம் கேட்க தொலைபேசி அழைக்க என ஒரு நாளைக்கு எத்தனை முறை அவனை பார்க்க சந்தர்ப்பம் உருவாக்க முடியுமோ அத்தனை முறையும் தவற விடாமல் செய்தாள்.

எத்தனை நாள், எத்தனை வாரம் கழித்து கேட்டாலும் எந்த நாள் என்ன உடை அவன் அணிந்திருந்தான், எப்போது அவன் முடி வெட்டினான், எப்போது சவரம் செய்து கொண்டு வந்தான், எந்த நாள் அவனுக்கு பிறந்த நாள், அதுவும் அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து எந்த நாள் என்று கூட சொல்லும் அளவுக்கு அவனை பற்றிய எல்லாம் அதுபடி.

மயில்வண்ணன் மதிய உணவை அருகில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் தான் தினமும் சாப்ப்பிடுவான், இவள் அதற்காகவே தன் வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை மறுதலித்து விட்டுஅந்த நேரத்தில் அவனை பார்க்க வேண்டும் என்று அந்த உணவு விடுதிக்கும் அலுவலகத்திற்கும் நடந்து கொண்டு இருப்பாள். ஒரு நாள் அங்கு இருக்கும் ஐஸ் க்ரீம் கடையில் அவள் தோழியோடு ஐஸ் க்ரீம் சாப்பிட சென்ற போது அவன் எதேச்சையாக அங்கு  ஐஸ் க்ரீம் சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து அவள் அந்த பனியை விட வேகமாக உருகினாள்.

அடுத்த நாள் மயில் வண்ணன் அந்த நிறுவன் ஊழியர்களுக்கு அனைவருக்கும் ஒரு அறிவிப்பு கொடுத்தான், மீனாட்சியை பற்றி இது எதுவுமே அவனுக்கு தெரியாது.

" நண்பர்களே, எனக்கு சென்னையில் வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதால், நான் இந்த நிறுவனத்திலிருந்து என் பணியை ராஜினாமா செய்கிறேன், நான் இங்கு பணி புரிந்த நாட்களில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்"

இப்படிக்கு

மயில்வண்ணன்.

No comments:

Post a Comment