Wednesday, December 29, 2010

இந்த நாடு விற்ப்பனைக்கு

வல்லரசு அந்தஸ்த்தை எட்ட துடிக்கும் பட்டியளில் முதல் இடத்தில் இருக்கும் இந்த இந்திய துணை கண்டத்தில் நூறு கோடி மக்கள் தொகையை தாண்டி விட்டோம், இரண்டு அணு சோதனை, சந்திராயன், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், அனைவரும் பயன் படுத்த செல் போன் என கடந்த அறுவது ஆண்டு சுதந்திர இந்தியா மேலோட்டமான முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் இன்னும் முழுசா மூன்று வேளை உணவு கிடைக்காமல் இருக்கும் ஒரு வர்க்கமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. படித்தவர்கள் எதோ ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு கணிசமான ஊதியம் வாங்கி கொண்டும், அரசாங்கத்தில் பணி புரிபவர்கள் பாடு இன்னும் மோசம், தன் பொண்டாட்டியை பக்கத்துக்கு வீட்டுக்காரன் தர குறைவாக பேசினால் கூட அவனை எதிர்த்து கேட்க திராணி இருப்பதில்லை, காரணம் பக்கத்துக்கு வீட்டுக்காரன் ஒரு வேளை பொய் வழக்கு தொடுத்தால் கூட தன் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்று கோழை தனமாக இருக்கும் இந்த சமூகமும் முழுசா மூன்று வேளை உணவு கிடைக்காத பட்டியலிலே இடம் பெரும். ஒரு வேளை அவர்கள் பணியில் ஏதேனும் சிக்கல் வருமாயின் அடுத்த ஆறு மாதத்தில் அவர்களுக்கும் இந்த நிலை தான். இப்படி கட்டமைக்க பட்டிருக்கும் ஒரு சமூக சூழலில் இன்னொரு வர்க்கம் சர்வ சாதரணமாக ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று நாட்டை ஏமாற்றி கொள்ளை அடித்து கொண்டிற்றுக்கிறது.
நாட்டில் இருக்கும் இய்றக்கை வளங்களை பயன்படுத்தி அதன் மூலம் வரும் வருவாயை நாட்டு நல திட்டங்களுக்கு பயன்படுத்தினால் மேலும் நாடு முன்னேறு கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம்  உப்பு மிளகாய் விலையாவது ஏழை மக்கள் வாங்கும் அளவு இருந்து கொண்டு இருக்கும். இவர்கள் அடிக்கும் நூதன கொள்ளை நேரடியாக யார் வீட்டிலும் இல்லை என்பது அவர்கள் கற்பிக்கும் நியாயம். ஆனால்
அது சாமானிய மனிதனின் அன்றாட வாழ்கையை எந்த அளவு பாதிக்கும் என்பது நம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. விலை ஏற்றதை செய்தி தாளில் படித்து தெரிந்து கொள்வதற்கும், அந்த விலை கொடுத்து வாங்க முடியாமல் திண்டாடி தெரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

மன்னர் ஆட்சிகளில் அந்நிய நாட்டு படையெடுப்பில் முடிந்த வரை செல்வங்களை கொள்ளை அடித்து கொண்டுவந்து தன் அரசிரடம் கொடுத்து புகழாரம் சூட்டிக்கொள்ளும் தளபதியாக ஆ. ராசாவும் கொள்ளை அடிக்கப்பட்ட செல்வத்தில் தன் கஜானாவை நிரப்பிக்கொள்ளும் அரசராக மு. கருணாநிதியும் நவீன வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். எதிர் கட்சிகள் கேட்கும் கேள்விக்கு விளக்கம் அளிக்காமல் அவர்கள் ஊழலை பட்டியல் இட்டு மக்களை திசை திருப்பும் அரசியல் சாமர்த்தியம் இந்திய அளவில் கற்றுகொடுக்கும் முன்னோடி அரசியல் வாதியாக கருணாநிதி மேலும் தன் அரசியல் அனுபவத்தை நிலை நிறுத்துகிறார். வெங்காய விலை எரியிருக்கிரதே ? என்று நிருபர் கேள்விக்கு, அதை பெரியாரிடம் தான் போய் கேட்கவண்டும், என்று நையாண்டி விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் அவருக்கு நகைச்சுவை உணர்வு ஏற்படுத்தும் கருவாக மாற்றி இருக்கிறார். சரி அவரை சொல்லி குற்றம் இல்லை, சமைத்த உணவு சாப்பிடும் நிலையில் கருணாநிதி இல்லை, ஆக அவரை பொருத்த வரை இது அவருக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனை.

2G 1 .76 லட்சம்  கோடி, காமன் வெல்த் போட்டிகளில் 8000  கோடி, ipl  போட்டிகளில் 1500 கோடி, மொத்தம் 2010 ல் மட்டும் 2  லட்சம் கோடி ஊழல் என்று ஒரு சாமானிய மனிதனின் கணித அறிவுக்கே எட்டாத தொகைகளில் ஊழல் செய்து சம்பாதிக்கும் இந்த நாட்டில் தான் பிச்சை எடுத்தல், விபச்சாரம் போன்றவற்றை செய்து பிழைக்கும் வர்க்கமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவை விலைக்கு விற்கும் டெண்டர் அறிவிப்பு ரொம்ப தூரத்தில் இல்லை. அதை பற்றி எந்த கட்சிகளும் கவலை படபோவதில்லை, யாருக்கு எத்தனை தொகுதி, கூட்டணி வியூகம், ஆட்சி அதிகாரம் இது பற்றி மட்டுமே கவலை, ஆனால் இவர்களுக்குள்ளே எதோ ஒரு கருப்பு ஆடு நாட்டை வியாபாரம் செய்யும் போது தன் பங்கை மட்டும் வாங்கி கொண்டு இவர்கள் வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்து கொள்ளும் முன் ஏற்பாடாக தான் இந்த கொள்ளை அடிக்கும் பணங்களை வெளி நாடுகளில் முதலீடு செய்து வைத்துள்ளார்கள். இங்கு குமாஷ்தாக்களாக இருப்பவர்கள் அப்போதும் தங்கள் வேலை பரி போகாமல் பாதுகாத்துக்கொள்ளவும், அதிலும் சிக்கல் வருமாயின் அவர் அவர் தம் குல தொழில் செய்து பிழைக்கவும் தயாராகி கொள்ளுவோம். ஆனால் அப்போதும் நாட்டை சுரண்டும் ஓநாய்களிடமிருந்தும், செல்வங்களை கொள்ளை அடித்து கொண்டிருக்கும் ஐயோக்கியர்களிடமிருந்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை பற்றி கவலை படாமல் முதலாளிகளுக்கு  கூட்டி கொடுத்து பிழைப்பு நடத்தி கொண்டிற்றுக்கும் அரசியல் வாதிகளை நாம் எதுவுமே செய்ய போவது இல்லை. மீண்டும் தேர்தல் வரும், இலவசங்களை வழங்கும் அறிக்கைகள் வரும் அதை பற்றி கொஞ்சம் பேசி விட்டு, தேர்தல் எந்த நாள் வரும் அந்த விடுமுறை நாளை எப்படி செலவளிக்கலாம் என்று மட்டுமே நம் கவலை. பொதுவாகவே வெளி நாட்டு தேர்தலை எந்த கண்ணோட்டத்தோடு பார்கிறோமோ அதே கண்ணோட்டம் நாம் ஓட்டு போடும் தேர்தலையும் பார்ப்பது தான் கொடுமை.

இதனால் தான் நம் கல்வி முறையில் கூட தெளிவான அரசியல் அறிவும், முறையான விழிப்புணர்வும் கொடுக்க படவில்லை. ஆனால் ஒரு பக்கம் பாலியல் கல்வி பற்றி மட்டும் விவாதிக்கிறோம். எங்கள் ஆட்சியில் தான் மக்களின் வாங்கும் சக்தியை அதிகபடுத்தி உள்ளோம் என்று மார் தட்டி கொள்ளும் மன்மோகன் சிங் அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை எந்த வித திட்டமும் இல்லாமல் ஏற்றிக்கொண்டு மக்கள் மீது சுமையை வைக்கிறது, ஒரு பக்கம் நாட்டை சுரண்டும் கொல்லைகூட்டதை பாராமுகமாக வைத்துக்கொண்டு கூட்டணியை காப்பாற்றி வைத்துக்கொள்வதில்அக்கறை காட்டுகிறது.

இத்தனை அக்கருமங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இதை எதுவுமே நடந்தது தெரியாதது போலவும், நாட்டில் மக்கள் எல்லாம் தங்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி, புளி ஏப்பத்தில் இருப்பவர்கள் போலவும் கருதி தமிழர் இறையான்மை வேண்டி மாநாடு நடத்துகிறார் போர்வாள் மீசைக்காரர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக  கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் மட்டும் என்ன தான் செய்வார். இன்றைக்கு தமிழ் நாட்டில் எந்த கட்சியையும் எதிர்க்கும் வல்லமை படைத்த ஒரே கட்சி அவருடையது தான், அவரிடம் மட்டுமே அத்தனை நெஞ்சுரம் படைத்த தொண்டர்கள் உண்டு, ஆனால் அவர் என்ன செய்ய முடியும் பாவம், தேர்தல் வர போகிறது இந்த முறை எப்படியும் 25 சீட்டும் பல கோடிகளும் இழக்க அவர் மட்டும் எப்படி விரும்புவார். 

இறுதியாக, அடுத்த ஆட்சி தமிழ் நாட்டில் ஜெயலலிதா வரலாம் என்று சிலர் கணிப்பு கூறுகிறார்கள், அப்படி ஏதேனும் நடுக்குமாயின் மேற்சொன்ன இந்திய அளவில் நடந்த மொத்த ஊழலும் தமிழ் நாட்டில் மட்டுமே நடந்தாலும் ஆச்சர்யமில்லை.

No comments:

Post a Comment