Wednesday, December 15, 2010

தேகமும் தம்மமும்

தேகம் நாவல் பற்றி மதிப்புறைகளை சாருவின் வாசகர்கள் அனைவரும் எழுத போகிறார்கள், அதற்கு முன் அந்த நாவலை பற்றிய மதிப்புரை வழங்கிய மிஷ்கின் பேச்சு பற்றி சில.....

நந்தலாலா சிக்குஜிரோவின் நகல் என்பதில் பார்வையாளர்களுக்கும் மிஷிகினுக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை, நம்மை பொறுத்த வரை முழு படமும், அவரை பொறுத்த வரை நான்கு கட்சிகள்...... போகட்டும்,

தண்ணி அடிக்கும் போது நட்பாகும் நீதியை போலத்தான் மிஷ்கின் சாருவுக்கு நட்பாகி இருப்பாரோ என்னவோ, ஆனால் அவரை இலக்கிய மேடை வரை கூட்டி வந்து வாசகர்களையும் அவரையும் அவமான படுத்தி கொள்வது இதுவே கடைசி மேடையாக இருக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

நந்தலாலாவும் சரி சித்திரம் பேசுதடியும் சரி தழுவல் என்பது அவர் கூற்று.  ஆனால் எந்த ஒரு புத்தகமும் எதை காபி அடித்து  எழுத படுவது இல்லை, இன்னும் ஒரு படி கீழிறங்கி பேசினால், சினிமா என்பது மூன்று மணி நேரம் பொழுது போக்குக்காக பயன் படுத்தப்படும் ஊடகம், ஆனால் ஒரு நூல் என்பது அறிவை விருத்தி படுத்தி கொள்ள ஒரு தேடுதல் நோக்கு உள்ளவர்கள் வாசிக்கும் கலை, ஒரு சினிமாவை பார்த்து விட்டு ஒருவன் தான் எதுவும் கற்று கொண்டதாக கூற முடியாது (சினிமா காரரை தவிர ) ஆனால் ஒரு நூல் என்பது.......... சரி இந்த விவரங்கள் எதுவும் தேவை இல்லை. அதுவும் சாருவை போல ஒரு உலக தரம் வாய்ந்த எழுத்தை, பல்கலை கழகங்களில் பட புத்தகமாக வைக்கப்பட்ட ஒரு நூல் எழுதிய எழுத்தாளனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அந்த நூல் பற்றி பேசாமல், அதுவும் அந்த நூலை நான் முழுசாக படிக்க வில்லை என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கூறுகிறார், ஆனால் இன்னும் பதினெட்டு வருடங்கள் படிக்க நூல்கள் வாங்கி என்ன செய்ய போகிறார் என்று தெரிய  வில்லை.

ஒரு மேடையில் சாரு மீஷ்கினை பற்றி சொன்னார் " மிஷ்கினின் உதவி இயக்குனர் ஒருவர் அவரிடம் கேட்கிறார், ஒரு நல்ல படம் எடுக்க என்ன செய்ய வேண்டும் ? என்று, அதற்க்கு மிஷ்கின், முதலில் நீ நல்லவனாக இருக்க வேண்டும் என்று"  இப்படி கூறி புளங்காகிதம் அடைந்த எழுத்தாளனின் புத்தகத்தை கூட படிக்காமல், அதற்க்கு மதிப்புரை வழங்க வந்து அதையும் செய்யாமல் குறைந்தது அந்த எழுத்தாளனை பற்றி பேசாமல் சுய புராணம் பாடிய குறைந்த பட்சம் சபை நாகரிகம் கூட இல்லாத ஒருத்தர் எப்படி ஒரு நல்ல படைப்பை கொடுக்க முடியும். விழா நாயகனும் அவருக்கான பார்வையாளர்களையும் தன் போக்கில் தான் தோன்றி தனமாக மதிப்பிடும் ஒருவர் கண்டிப்பாக பார்வையாளனின் ரசனைக்கு சுயமாக ஒரு நல்ல படைப்பை கொடுக்கவே முடியாது. ஜீரோ டிகிரியும் , ராஸ லீலாவும், தேகமும் ஏற்படுத்திய மன உணர்வுகளை ஒரு இயக்குனராக அவரால் எத்தனை கோடி செலவு செய்தும் ஏற்படுத்தவே முடியாது.

மிஷ்கின் தன்னிலை விளக்கம் கொடுக்க விரும்பினால் அவராக ஒரு கருத்தரங்கு வைக்க வேண்டும், அதற்கு அழைப்பு கொடுத்து அந்த மேடையில் பேச வேண்டும், அதை விடுத்து வரும் மேடைகளில் எல்லாம் சுய புராணம், பிலிம் சேம்பரில் அவர் கூறுகிறார், அவர்  ஒரு இயக்குனராக இருக்க மற்றவர்கள் எல்லாம் பொறாமை பட வேண்டுமாம், சுயமாக சிந்தித்து சுயமாக ஒரு நூல் எழுதி அதன் மூலம் வாசகர்களை தன் வசம் வைத்திருக்கும் ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும், இதில் அவரை பார்த்து யார் பொறாமை பட வேண்டும் என்று நினைக்கிறார் என்று தெரிய வில்லை, ஒரு வேலை அது அவருடைய உதவி இயக்குனர்களுக்கு சொன்ன செய்தியோ என்னவோ?

ஒரு பின் நவீன, நான் லீனியர் படைப்புக்கும், கிளர்ச்சி ஊட்டும் படைப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் ஒருத்தர் எத்தனை ஆயிரம் புத்தகம் வாங்கி தான் என்ன பயன். நேற்று இரவு தேகம் நாவலை வாசிக்கும் போது ஏற்பட்ட பரவசம் சொல்லி விளக்க முடியாது, ஒரு ஜென் தத்துவத்தை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. முதலில் இருக்கும் இரண்டு பக்கத்தில் வரும் ஆண் குறி, புட்டம், பேருந்தில் பெண்களை உரசுவது, போன்ற வார்த்தைகளை வைத்து நுனிப்புல் மேய்ந்து விட்டு ஒரு நூல் தரத்தை மதிப்பிடுவதை விட  ஒரு அறிவிழி தனம் எதுவும் இருக்க முடியாது. இதில் வசனம் எழுதி பாருங்கள் அப்போ தெரியும் கஷ்டம் என்று ஒரு இறுமாப்பு வேறு.

"தேகம்" முழுவதும் வதை படுத்துவதை உணர்த்துவதாகவே உள்ளது, இது ஒவ்வொரு மனதிற்குள்ளும் இருக்கும் துவேஷ மனநிலையை படம் பிடிக்கிறது, எல்லாரிடமும் எதோ ஒரு வகையில் ஒரு தர்மா வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் இந்த மனநிலையிலிருந்து விடுபடவே இந்த நூல் உதவும் என்பது என் பார்வை, ஆசையே துன்பத்திற்கு காரணம், பிற உயிரை வதை படுத்த கூடாது என்ற தம்ம பதம் இந்த நூலில் தற்கால சூழலுக்கு ஏற்றவாறு கொடுத்து இருக்கிறார். இப்படியான ஒரு ஜென் ததுவதங்களையும் புத்த தம்மத்தையும் வழியுறுத்தும் ஒரு தத்துவார்த்த படைப்பை பற்றி பேசாமல்  சுய புராணம் பேசும், சபை நாகரிகம் இல்லாத ஒருவரை பேச சொன்னால் இந்த மாதிரியான மனஉளைச்சல் தான் மிச்சம்.

அன்புடன்

ரஸவாதி
http://rashavathi.blogspot.com/

No comments:

Post a Comment